» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜப்பான் இளவரசி மேக்கோவுக்க்கு திருமணம் ‍ : 5 ஆண்டு காதலரை கரம் பிடிக்கிறார்

வியாழன் 18, மே 2017 9:02:09 PM (IST)

ஜப்பான் இளவரசி மேக்கோ சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் தன்னுடன் ஒன்றாகப் படித்த காதலரை கரம் பிடிக்கிறார்.

ஜப்பான் இளவரசி மேக்கோ (25). இவர் ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ-மிச்சிகோ தம்பதியரின் இளைய மகன் இளவரசர் அகிஷினோ- கிகோ தம்பதியரின் மகள் ஆவார். டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார். இங்கிலாந்து சென்று லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். தற்போது டோக்கியோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் தன்னுடன் டோக்கியோ சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த கீ கொமுரு என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் டோக்கியோவில் உள்ள ஷிபுயா என்ற உணவு விடுதியில்தான் 5 ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தனர்.அதைத் தொடர்ந்து இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.தற்போது கீ கொமுரு, டோக்கியோ சட்ட அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இளவரசி மேக்கோ, தன் காதலரை பெற்றோர் அகிஷினோ -கிகோவிடம் அறிமுகம் செய்து வைத்து, திருமணத்துக்கு அவர்களது சம்மதத்தை பெற்று விட்டார்.

இவர்களது திருமணம் எப்போது என்பது அறிவிக்கப்படவில்லை. முதலில் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு, திருமணத்துக்கான தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இளவரசி மேக்கோ, திருமணத்துக்கு பின்னர் அரச அந்தஸ்தை கைவிட்டு விட வேண்டும். இளவரசி என அழைக்கப்படமாட்டார். சாமானிய மக்களில் ஒருவராகி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

makkalமே 23, 2017 - 04:54:05 PM | Posted IP 61.3.*****

happylife

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Black Forest Cakes



Universal Tiles Bazar

CSC Computer Education

Nalam Pasumaiyagam

Johnson's Engineers

Pop Up Here

selvam aqua



Thoothukudi Business Directory