» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரகசிய உளவுத் தகவல் கசிவு: டிரம்ப் - ரஷ்யா தொடர்பு பற்றி விசாரிக்க சிறப்பு அதிகாரி நியமனம்

வியாழன் 18, மே 2017 9:18:49 AM (IST)

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவி செய்ததா எனும் விவகாரத்தை விசாரிக்க சிறப்பு அதிகாரி ஒருவரை அமெரிக்க சட்டத்துறை நியமித்துள்ளது.

சிறப்பு அதிகாரியாக உள்நாட்டு புலன்விசாரணை அமைப்பான எஃப்.பி.ஐயின் முன்னாள் தலைவர் ராபர்ட் முல்லரை சட்டத்துறை நியமனம் செய்துள்ளது. 

சென்ற வாரம் இந்த விசாரணையை நடத்தி வந்த அதிகாரி கோமியை டிரம்ப் பதவி நீக்கம் செய்தார். மேலும் தன்னை சந்தித்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ்விடம் ஐ எஸ் இயக்கம் தொடர்பான உளவுத் தகவல்களையும் அதிபர் டிரம்ப் அளித்துள்ளார். இரண்டு விவகாரங்களும் அமெரிக்க அரசியல் வட்டாரத்தை உலுக்கி வருகின்றன. 

கட்சி பேதமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரபட்சமற்ற விசாரனையை நடத்த வேண்டும் என்கின்றனர். சிலர் அதிபரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கூட கோரிக்கை விடுத்துள்ளனர். டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ப்ளின் ரஷ்யாவுடன் நெருக்கமான தொடர்புகளை உடையவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இது பற்றியே கோமி விசாரணை நடத்தி வந்தார். அதிபர் கோமியை ப்ளின் தொடர்பான விசாரணையில் சில மாற்றங்களை செய்யச் சொன்னதாக கூறப்படுகிறது. 

இதையொட்டியே கோமி பதவி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த வருடத்தின் துவக்கத்தில் அமெரிக்க உளவு அமைப்புகள் அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக குற்றஞ்சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அமெரிக்க எதிர்கட்சியான ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமான விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே 2016ரிலும், இவ்வாண்டும் அதே கோரிக்கையை அவர்கள் வைத்துள்ளனர். இம்முறை சிறப்பு தீர்மானம் ஒன்றின் மூலம் அதைச் சாதிக்க முயல்கின்றனர். 

எனினும் அவர்களுக்கு தங்களின் 193 உறுப்பினர்களின் ஆதரவோடு டிரம்ப் சார்ந்த குடியரசுக் கட்சியின் 23 உறுப்பினர்களின் ஆதரவும் தேவை. ஆனால் இதுவரை இருவர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குடியரசுக்கட்சித் தலைவர்கள் பலரும் அடுத்தடுத்து சர்ச்சைகள் உருவாவது குறித்து வருத்தமுற்றுள்ளனர். சர்ச்சைகள் நிர்வாகத்திற்கு நல்லதல்ல என்றார் ஒரு மூத்த உறுப்பினர். சர்ச்சைகளுக்கு மத்தியில் டிரம்ப் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை வெள்ளியன்று துவங்கவுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


selvam aqua



Panchai Dairy

Black Forest Cakes



CSC Computer Education


New Shape Tailors

Johnson's Engineers

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory