» செய்திகள் - விளையாட்டு » உலகம்

137 ஆண்டுகளில் உலக அளவில் அதிக வெப்பமான நாள்: 2வது இடத்தை பிடித்த ஏப்ரல் 17..!!

புதன் 17, மே 2017 12:54:30 PM (IST)

137 ஆண்டுகளில் உலகின் மிக வெப்பமான நாட்களில், ஏப்ரல் 17-ந்தேதி 2-வது இடத்தை பிடித்துள்ளது. 

தற்போது கோடை வெயில் வாட்டி வருகிறது. இந்த நிலையில் சர்வதேச அளவில் பதிவான வெப்பம் குறித்து சமீபத்தில் கணக்கெடுக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள 6,300 வானிலை மையங்களில் பதிவான வெப்பம் கணக்கிடப்பட்டது. அதில் கடந்த மாதம் அதாவது ஏப்ரல் 17-ந்தேதி அதிக அளவு வெப்பம் பதிவாகி உள்ளது.

அன்று வடமேற்கு கனடா, கலாஸ்கா (அமெரிக்கா), ரஷியாவில் உள்ள சைபீரியாவின் பெரும்பகுதி, வடக்கு சீனா, மற்றும் மங்கோலியாவில் வழக்கத்தை விட அதிக அளவு வெப்பம் பதிவாகி இருந்தது. இது கடந்த 137 ஆண்டுகளில் அதிக வெப்பம் பதிவான 2-வது நாளாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் இதைவிட சிறிது குறைந்த அளவில் வெப்பம் பதிவாகி இருந்தது. எனவே அது அதிக வெப்பம் பதிவான 3-வது நாளாக கருதப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




Panchai Dairy

selvam aqua

CSC Computer Education


New Shape Tailors

Nalam Pasumaiyagam

Johnson's Engineers



Black Forest Cakes




Thoothukudi Business Directory