» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் ஆபத்தான சூழலில் இளைஞர் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் போன்

செவ்வாய் 16, மே 2017 1:36:58 PM (IST)

தனது உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் போனுக்கு, இளைஞர் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூ ஹாம்ஸ் ஹையரைச் சேர்ந்த க்ரிஸ்டோபர் பியுசெர். இவர் கடந்த ஒன்றாம் தேதி, விடுமுறை தினத்தை ஒட்டி வீட்டில் இருந்துள்ளார். தனது தாயின் அறையில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் வெளியில் ஏதோ விபரீதம் நிகழ்வது போன்று சத்தம் கேட்டு வெளியே வந்துள்ளார். 

அப்போது வீட்டில் தீப்பற்றியதைக் கண்டுள்ளார். இதற்கிடையில் அவர் ஆன் செய்த லைட் வெடித்து சிதறியது. ஒயரில் தீப்பரவி, விளக்குகள் வெடித்தன. தீயில் சிக்கிக் கொண்ட க்ரிஸ்டோபரின் முகங்கள் மட்டும் கைகளில் காயம் ஏற்பட்டது. அப்போது அருகிலிருந்த ஆப்பிள் போனை எடுக்க முயற்சித்துள்ளார்.

ஆனால் கைகளில் ஏற்பட்ட காயங்களால் எடுக்க முடியவில்லை. பின்னர் போனை எப்படியோ சிரமப்பட்டு நகர்த்தி, தனது அருகே கொண்டு வந்துள்ளார். இருப்பினும் காயங்கள் காரணமாக, போனில் டயல் செய்யமுடியவில்லை. உடனே ஆப்பிள் போனில் இடம்பெற்றுள்ள சிரி அப்ளிகேஷனை தனது வாய்ஸ் மூலம் கட்டளை பிறப்பித்துள்ளார். 

அவசர உதவி எண்ணான 911ற்கு அழைத்து,(அமெரிக்காவின் அவசர உதவி எண்) போலீசை வரவழைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது க்ரிஸ்டோபர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

CSC Computer Education

Nalam Pasumaiyagam

Sterlite Industries (I) Ltd

Johnson's Engineers



New Shape Tailors

Universal Tiles Bazar



selvam aqua



Thoothukudi Business Directory