» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உளவுத் தகவல்களை ரஷ்யாவிற்கு வழங்கினாரா டிரம்ப்? வாஷிங்டன் போஸ்ட் பரபரப்பு செய்தி..!!

செவ்வாய் 16, மே 2017 10:42:44 AM (IST)

தன்னை சந்திக்க வந்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் அமெரிக்கா சேகரித்த இரகசிய உளவுத் தகவல்களை அதிபர் டிரம்ப் வழங்கியதாக செய்தி வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் பிரபல நாளேடான வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தைப் பற்றிய செய்தியை டிரம்ப் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ்விடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இத்தகவல் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி நாட்டிடம் இருந்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஆனால் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் இத்தகவலை மறுத்துள்ளார். அதிபர் அப்படி எந்தத்தகவலையும் ரஷ்ய அமைச்சரிடம் வழங்கவில்லை என்றார். அதிபர் இரகசியத் தகவல்களை வழங்கியதாக சொல்லப்பட்டதற்கு பலரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். குறிப்பாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் அதிபரின் இச்செயல் அதுவும் ரஷ்யாவிடம் இரகசியத் தகவல்களை வழங்கியது என்பது மன்னிக்கத்தக்கதல்ல என்று உளவுத்துறைக்கான கமிட்டியின் ஜனநாயககட்சி உறுப்பினர் மார்க் வார்னர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Universal Tiles Bazar



Nalam Pasumaiyagam

Sterlite Industries (I) Ltd



New Shape Tailors

CSC Computer Education

Johnson's Engineers

selvam aqua



Thoothukudi Business Directory