» செய்திகள் - விளையாட்டு » உலகம்

புனிதப் போர் என்ற பெயரில் பயங்கரவாதத்தைப் பரப்புகிறார் ஹஃபீஸ் சயீது : பாகிஸ்தான் ஒப்புதல்

திங்கள் 15, மே 2017 11:30:26 AM (IST)

புனிதப் போர் என்ற பெயரில் பயங்கரவாதத்தைப் பரப்பியதற்காகவே ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீதைக் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக பாகிஸ்தான் உள்துறை தெரிவித்துள்ளது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா, பாகிஸ்தானிடம் வலியுறுத்தி வருகிறது. ஹஃபீûஸ சயீதை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்காவும் அறிவித்தது. எனினும், பாகிஸ்தானில் அவர் சுதந்திரமாக செயல்பட்டு வந்த நிலையில், அமெரிக்காவில் புதிதாக அதிபர் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்கத் தவறினால், அந்த நாட்டுக்கு வழங்கப்படும் உதவிகள் நிறுத்தப்படும் என்று எச்சரித்தார்.

இந்தச் சூழலில், ஹஃபீஸ் சயீதையும், அவரது உதவியாளர்களான ஜாபர் இக்பால், அப்துல் ரகுமான் அபித், அப்துல்லா உபெய்த், காஸி காஷிஃப் நியாஸ் ஆகிய நால்வரையும் பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது ஹஃபீஸ் சயீது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தங்களின் கைதுக்கு எதிராக நீதித் துறை மறு ஆய்வுக் குழுவிடம் ஹஃபீஸ் சயீது மற்றும் அவர்களது உதவியாளர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இஜாஸ் அஃப்ஸல் கான், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆயிஷா மாலிக், ஜமால் கான் மண்டோகாயில் ஆகியோர் அடங்கிய குழு சனிக்கிழமை விசாரித்தது.

இந்த விசாரணைக்கு, ஹஃபீஸ் சயீது மற்றும் அவரது உதவியாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். ஹஃபீஸ் சயீது தரப்பில் வாதாட வழக்கறிஞர் அழைத்து வரப்பட்டிருந்த நிலையிலும், தானே வாதிட விரும்புவதாகக் கூறிய ஹஃபீஸ், நீதிபதிகள் குழுவிடம் கூறியதாவது: என் மீது பாகிஸ்தான் அரசு சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த அரசு அமைப்பும் ஆதாரம் காட்டவில்லை. காஷ்மீர் பிரச்னைக்கு எதிராக நான் குரல் கொடுப்பதைத் தடுக்கவும், அந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசின் பலவீனமான நிலைப்பாட்டை நான் விமர்சித்து வருவதாலும் என் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

பாகிஸ்தான் அரசுத் தரப்பில் ஆஜரான உள்துறை அமைச்சக அதிகாரி கூறுகையில், "புனிதப் போர் என்ற பெயரில் ஹஃபீஸ் சயீது பயங்கரவாதத்தைப் பரப்புகிறார். அதன் காரணமாக, ஐ.நா. சபை மற்றும் சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தியதன் காரணமாகவே ஜமாத்-உத்-தாவா தலைவர்களைக் கைது செய்தோம் என்று குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து, விசாரணையை மே 15-க்கு  ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய விசாரணையின்போது பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரல் நேரில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டனர்.ஹஃபீஸ் சயீது தலைமையிலான லஷ்கர்-இ-தாய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள், பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பைக்கு வந்து நடத்திய தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailorscrescentopticals

Johnson's EngineersFriends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory