» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நாய்களை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி அதிகம் : ஆய்வில் புதிய அதிர்ச்சி தகவல்

சனி 13, மே 2017 8:32:10 PM (IST)

நாய்கள், சுண்டெலி, சுறா போன்ற பாலூட்டிகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி குறைவு என்ற வாதம் இருந்து வருகிறது. ஆனால் அவற்றை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நாய்கள், சுண்டெலி, முஞ்சூறு மற்றும் சுறா போன்ற பாலூட்டிகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி குறைவு என்ற வாதம் இருந்து வருகிறது. ஆனால் அவற்றை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.அமெரிக்காவில் மியாமியில் உள்ள ரட்சர்ஸ் பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானி ஜான் பி மெக்கன் மோப்ப சக்தி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதில் நாய், சுண்டெலி உள்ளிட்ட மற்ற விலங்குகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என கண்டு பிடித்தார். பொதுவாக மனிதர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசனைகளை நுகர்ந்து அவை எவை என கூற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகவலை அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 1879-ம் ஆண்டில் விஞ்ஞானி புரோகா இதுகுறித்து ஒருஆய்வு கட்டுரை வெளியிட்டார். அதில் மற்ற விலங்குகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி குறைவு என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

இடைத் தேர்தலில் நவாஸ் மனைவி குல்ஸூம் வெற்றி

திங்கள் 18, செப்டம்பர் 2017 9:06:27 AM (IST)

Sponsored Ads


Johnson's Engineers

Universal Tiles Bazar

selvam aqua

CSC Computer Education

Nalam Pasumaiyagam


Black Forest Cakes


Pop Up Here


New Shape Tailors



Thoothukudi Business Directory