» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு : 25 பேர் பலி சபாநாயகர் உள்பட 40 பேர் காயம்

வெள்ளி 12, மே 2017 8:33:26 PM (IST)

பாகிஸ்தான் நாட்டில் நடந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியாகியுள்ளனர். 

பாகிஸ்தானின் தென் மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தின் மாஸ்டாக் பகுதியில் உள்ள மசூதியில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதில், 25 பேர் பலியாகி உள்ளனர். மேலும், அந்நாட்டு செனட் சபை துணை சபாநாயகர் உள்பட 40 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் செனட் சபையின் துணை சபாநாயகர் மவுலானா அப்துல் கபூர் கைதேரி குண்டு வெடிப்பில் காயம் அடைந்து உள்ளார். 

இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பேசிய கைதேரி, தனக்கு சிறிய அளவிலான காயமே ஏற் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் கைதேரியின் கார் சேதம் அடைந்ததோடு, அவருடைய கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

இடைத் தேர்தலில் நவாஸ் மனைவி குல்ஸூம் வெற்றி

திங்கள் 18, செப்டம்பர் 2017 9:06:27 AM (IST)

Sponsored Ads

New Shape Tailors

selvam aqua

Universal Tiles Bazar



Black Forest Cakes

Pop Up Here

Johnson's Engineers


CSC Computer Education


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory