» செய்திகள் - விளையாட்டு » உலகம்

எச்1பி விசா கட்டுப்பாடு: அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சருடன் அருண் ஜெட்லி ஆலோசனை

வெள்ளி 21, ஏப்ரல் 2017 5:56:28 PM (IST)



அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் புதிய விசா கொள்கையால் இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சருடன் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்காவுக்கு வேலைதேடி செல்லும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கான H1B பணி விசா வழங்க கட்டுப்பாடு விதிக்கும் அதிரடி உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டார். இதையடுத்து இந்த உத்தரவு இன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது.  

அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்த நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப், H1B விசா என்ற நடைமுறையின் மூலம் வெளிநாட்டினர் அனைவருக்கும் அமெரிக்காவில் எளிதாக வேலை கிடைக்கும் வாய்ப்பை பறிக்கும் வகையில் இனி தகுதி உள்ளவருக்கு மட்டுமே இத்தகைய விசாக்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

அமெரிக்காவில், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பொறியாளர்கள் பலரும் வெளிநாட்டவர்களே. முக்கியமாக, இந்தியர்கள் அந்தப் பணிகளில் அதிகம் பணியாற்றுகின்றனர். எனவே, அதிகமாக உள்ளூர்வாசிகளைப் பணியமர்த்துவதற்காக H1B விசா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இதற்கான அதிரடி உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கடந்த 18-ம் தேதி கையொப்பமிட்டார்.

இதற்கு முந்தைய நிலவரப்படி அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக விசா கேட்டு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினரின் பெயர்கள் H-1B முறையில் குலுக்கலில் போடப்பட்டு, தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு எல்லாம் விசா வழங்கப்பட்டு வந்தது. தற்போது, டிரம்ப் பிறப்பித்துள்ள இந்த புதிய உத்தரவின்படி, அமெரிக்காவில் பணியாற்ற விரும்புவர்களுக்குள் அதிகமான சம்பளம் வாங்கும் அளவுக்கு தத்தமது துறைகளில் மிகவும் தேர்ச்சி பெற்ற வல்லுனர்களுக்கு மட்டுமே இனி இதுபோன்ற அவசர விசாக்கள் அளிக்கப்படும்.

இத்தகையை விசாக்களை யாருக்கெல்லாம் அளிப்பது என்று தேர்வு செய்யும் பொறுப்பு அமெரிக்க உள்துறை அமைச்சர் , நாட்டின் தலைமை அரசு வழக்கறிஞர், தொழிலாளர் துறை அமைச்சர் , உள்நாட்டு பாதுகாப்புத் துறை தலைமை அதிகாரிகளிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. முந்தைய நிலவரப்படி அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக ஆண்டுதோறும் 65 ஆயிரம் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயின்ற உயர்பட்டதாரிகள் சுமார் 20 ஆயிரம் பேருக்கும் ஆண்டுதோறும் வேலைக்கான விசாக்கள் அளிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Johnson's Engineers

CSC Computer Education

selvam aqua

New Shape Tailors


Universal Tiles Bazar




Pop Up Here

Nalam Pasumaiyagam


Black Forest Cakes



Thoothukudi Business Directory