» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை லண்டனில் ரூ.4 கோடிக்கு ஏலத்தில் விற்பனை

வெள்ளி 21, ஏப்ரல் 2017 12:32:40 PM (IST)



மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை லண்டனில் ரூ.4 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் உருவப்படம் பொறித்து, 1948–ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட ரூ.10 முக மதிப்பிலான அஞ்சல் தலைகள் மிகவும் அரிதானவை. அவற்றில் 13 அஞ்சல் தலைகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இந்த 13 அஞ்சல் தலைகள் வெளியீட்டுத்தாளில் இருந்து, கவர்னர் ஜெனரல் செயலகத்துக்கு வழங்கப்பட்டதாகும். இவைதான் அதிகாரப்பூர்வமானதாகும்.

அவற்றில் 4 அஞ்சல் தலைகள், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் ராயல் தபால் தலை சேகரிப்பு தொகுப்பில் உள்ளன. இந்த தொகுப்புதான் உலகின் மிகப்பெரிய அஞ்சல் தலை தொகுப்பு என கருதப்படுகிறது. மீதி 9 அஞ்சல் தலைகளில் 4 அஞ்சல் தலைகள் ஒரே தாளாக சேர்ந்து உள்ளவை. இந்த 4 அஞ்சல் தலைகள் லண்டனில் ஸ்டான்லி கிப்பன்ஸ் என்ற வர்த்தகரால் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இவற்றை ஆஸ்திரேலியாவை சேர்ந்த தனியார் அஞ்சல் தலை சேகரிப்பாளர் ஒருவர் ஏலத்தில் வாங்கி உள்ளார். அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. இந்த 4 அஞ்சல் தலைகள், 5 லட்சம் பவுண்டுகளுக்கு (சுமார் ரூ.4 கோடியே 15 லட்சம்) ஏலத்தில் விடப்பட்டுள்ளன. இந்திய அஞ்சல் தலைகள் இந்த அளவுக்கு அதிக விலைக்கு விற்பனை ஆகி இருப்பது இதுவே முதல் முறை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Johnson's Engineers

Nalam Pasumaiyagam


selvam aqua

New Shape Tailors

Universal Tiles Bazar



CSC Computer Education




Thoothukudi Business Directory