» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க பகுதிக்குள் ரஷ்ய போர் விமானங்கள் அத்து மீறி நுழைந்ததால் பரபரப்பு

வியாழன் 20, ஏப்ரல் 2017 4:15:20 PM (IST)

அமெரிக்க வான் பகுதிக்குள் ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

வட அமெரிக்க கண்டத்தில் கனடாவின் மேற்கு பகுதியில் அலாஸ்கா என்ற இடம் உள்ளது. இது, அமெரிக்காவுக்கு சொந்தமான பகுதி ஆகும். இதையொட்டி கோடியாக் என்ற தீவு இருக்கிறது. இதுவும் அமெரிக்காவுக்கு சொந்தமானது. இதையொட்டிதான் ரஷ்யாவின் கிழக்கு பகுதி நிலப்பரப்பு அமைந்துள்ளது. ரஷ்ய போர் விமானங்கள் அந்த பகுதியில் அடிக்கடி ரோந்து சுற்றி வருவது வழக்கம்.இவ்வாறு ரோந்து வந்த 2 போர் விமானங்கள் கோடியாக் தீவு பகுதியில் அத்து மீறி நுழைந்து சுற்றி வந்தது. 

இவை டி.யு.-95 என்ற வகையை சேர்ந்த குண்டு வீச்சு விமானங்கள் ஆகும். ரஷ்ய விமானங்கள் அத்து மீறி நுழைந்தது தெரிய வந்ததும் அமெரிக்கா 2 போர் விமானங்களை அந்த திசை நோக்கி அனுப்பியது. எப்.-22 ராப்டார் வகையை சேர்ந்த இந்த விமானங்கள் ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்தது. இதனால் ரஷ்ய விமானங்கள் பின்வாங்கியதுடன் தங்கள் வான்பகுதிக்கு சென்று விட்டன.  இத்தகவலை அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இந்த சம்பவம் குறித்து பென்டகனோ, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமோ எந்த கருத்தையும் வெளியிடவில்லை. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua


Black Forest Cakes



Nalam Pasumaiyagam

New Shape Tailors



Panchai Dairy


CSC Computer Education

Johnson's Engineers



Thoothukudi Business Directory