» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒபாமா மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது: மனநிலை பாதிக்கப்பட்டவரா?

வியாழன் 20, ஏப்ரல் 2017 3:26:37 PM (IST)

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மகளுக்கு காதல் தொல்லை கொடுத்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் மாலியா (18). தற்போது நியூயார்க் மன் காட்டனில் உள்ள வின்ஸ்டர்இன் என்ற நிறுவனத்தில் பயிற்சி கல்வி பயின்று வருகிறார். இங்கு 30 வயது வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து மாலியாவுக்கு தொல்லை கொடுத்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் மாலியா பணிபுரியும் நிறுவனத்துக்குள் அத்து மீறி புகுந்தார். 

அவர் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று எழுதப்பட்ட பேனர் ஒன்றை எடுத்து வந்திருந்தார்.மாலியா இருந்த அறையின் ஜன்னல் வழியாக அந்த பேனரை காட்டினார். அவரை பாதுகாப்பு ஊழியர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அடுத்து 2 நாட்கள் கழித்து மீண்டும் அந்த வாலிபர் அங்கு வந்தார். அவர், பக்கத்து கட்டிடத்தில் ஏறி நின்று மாலியா இருந்த அறையை நோக்கி அதே பேனரை காண்பித்தார். எனவே, அந்த நிறுவனத்தினர் வாலிபர் குறித்து அமெரிக்க பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

அவர்கள் விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த வாலிபர் புரூக்லின் நகரில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். அவரது பெயர் ஜெயர் நில்டான் கர்டோசா என்று தெரியவந்தது. இவர் கறுப்பினத்தை சேர்ந்தவர். அவரை பற்றிய மற்ற விவரங்கள் எதையும் வெளியிடவில்லை. அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதாக பாதுகாப்பு படையினர் கூறி உள்ளனர். ஒபாமா அதிபராக இருந்த போது மாலியாவை சந்திக்கும் வகையில் வெள்ளை மாளிகைக்கே இவர் வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals





Friends Track CALL TAXI & CAB (P) LTD



Johnson's Engineers





Thoothukudi Business Directory