» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அயர்லாந்தில் இந்தியப் பெண்ணுக்கு நிறவெறி மிரட்டல் :ஆபாச வார்த்தைகளால் திட்டிய அவலம்

வியாழன் 20, ஏப்ரல் 2017 1:56:10 PM (IST)

அயர்லாந்து நாட்டில் இந்தியப் பெண் ஒருவருக்கு, அந்நாட்டுப் பெண் நிறவெறி மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக, உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்களுக்கும், இதர ஆசிய நாட்டவருக்கும், நிறவெறி மிரட்டல் விடுப்பது அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் இந்தியர்கள் மீது நிறவெறியாளர்கள் கொலைவெறி தாக்குதல்கூட நிகழ்த்தியுள்ளனர். இந்நிலையில், அயர்லாந்து நாட்டில், இந்தியப் பெண் ஒருவர் ரயிலில் செல்லும்போது, அந்நாட்டைச் சேர்ந்த வெள்ளை நிறப் பெண்மணியும் உடன் பயணித்துள்ளார். 

திடீரென அவர், இந்தியப் பெண் அமர்ந்திருந்த இருக்கை அருகே, தனது கைப்பையை கோபத்துடன் வீசிவிட்டு, ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், இந்தியாவுக்கே திரும்பிச் செல்லும்படி ஆவேசமாக அவர் கத்திவிட்டு, திரும்பிச் சென்றார்.இதனை அங்கே இருந்த சக ஆசிய நாட்டவர் ஒருவர், தனது ஸ்மார்ட்ஃபோனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers
jesus redeems

Sponsored Ads

Nalam Pasumaiyagam



New Shape Tailors

Black Forest Cakes


CSC Computer Education

Johnson's Engineers

Panchai Dairy





selvam aqua



Thoothukudi Business Directory