» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பூமியைப் போன்று வாழ்வதற்கு ஏற்ற சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

வியாழன் 20, ஏப்ரல் 2017 10:52:48 AM (IST)

பூமியைப் போன்றே வாழ்வதற்கு ஏற்ற சூழல் கொண்ட புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புவியை ஒத்த சூப்பர் எர்த் எக்சோ பிளானட் ஒன்றை சர்வதேச விஞ்ஞானிகள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். செந்நிற நட்சத்திரம் ஒன்றை சுற்றி வரும் இக்கிரகத்திற்கு, எல்.எச்.எஸ் 1140 என்று பெயரிடப்பட்டுள்ளது. நாம் வசிக்கும் புவியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய கிரகம் உள்ளது. 

அதன் மேற்புறத்தில் தண்ணீர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.உயிர் வாழ நீர் அத்தியாவசிய தேவையாக இருப்பதால், அதன்மூலம் மனிதர்கள் வாழ முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

புவியை விட சிறியதாகவும், குளிர்ச்சி நிறைந்ததாகவும் காணப்படுகிறது. மேலும் அடர்த்தி 7 மடங்கு அதிகமாக உள்ளது. அதன் விட்டம் 18,000 கி.மீ என அமைந்துள்ளது. புதிய கிரகத்தில் பாறைகள் நிறைந்தும், இரும்பு படிமங்கள் நிறைந்தும் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 500 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டதாக கூறப்படும் இந்த கிரகத்தில், 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வெளிச்சம் விழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

selvam aqua



Pop Up Here

Nalam Pasumaiyagam

Johnson's Engineers

Black Forest Cakes

New Shape Tailors



Universal Tiles Bazar


CSC Computer Education



Thoothukudi Business Directory