» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அருணாச்சல பிரதேசத்திற்கு புதிய பெயர் அறிவித்த சீனா : இந்தியா கடும் கண்டனம்

புதன் 19, ஏப்ரல் 2017 1:26:54 PM (IST)

இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஆறு இடங்களுக்கு, அதிகாரபூர்வமாக பெயர் அறிவித்துள்ளது சீனா.

அருணாச்சல பிரதேசத்துக்கு தலாய் லாமா வருகை தந்ததை சீனா கடுமையாக எதிர்த்துவந்தது. அவரது வருகையை இந்தியா ஆதரித்தால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றும் சீனா முன்னதாக எச்சரித்திருந்தது. தற்போது, தன்னுடைய முதல் நடவடிக்கையாக சீனா, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஆறு இடங்களுக்குப் பெயர்களை அறிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்துக்கு, தெற்கு திபெத் எனப் பெயர் சூட்டியுள்ள சீனாவுக்கு, இந்தியா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. ஆறு இடங்களுக்கு சீனப் பெயர்களை அறிவித்துள்ள சீனா , ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒரு ஆக்கிரமிப்புப் பகுதிக்கும் சீனப் பெயரை அறிவித்துள்ளது.சீனாவின் பிராந்திய இறையாண்மையையும், நன்மையையும் கருத்தில்கொண்டு, சீனாவின் தெற்கு திபெத்(இந்தியாவின் அருணாச்சல பிரதேசம்) பகுதிகளை மீட்போம் என அதிகாரபூர்வமாக அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Pop Up Here

selvam aqua

Nalam Pasumaiyagam



Universal Tiles Bazar

CSC Computer Education


Johnson's Engineers

New Shape Tailors


Black Forest Cakes



Thoothukudi Business Directory