» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வாரம்தோறும் ஏவுகணை சோதனை.. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்போம்: வடகொரியா அதிரடி அறிவிப்பு

புதன் 19, ஏப்ரல் 2017 12:55:19 PM (IST)

வாரம்தோறும் ஏவுகணை சோதனை நடத்தப்படுவதாகவும், எங்களை தாக்க நினைத்தால் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்போம் எனவும்  வடகொரியா அதிரடியாக அறிவித்துள்ளது. 

5 முறை அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ள வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. வடகொரியாவை தடுத்து நிறுத்தி எச்சரிக்கும் விதத்தில், தனது கார்ல் வின்சன் கடற்படை அணியை அமெரிக்கா அங்கு அனுப்பி வைத்துள்ளது. இதன் காரணமாக அங்கு போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.கடந்த 2 தினங்களுக்கு முன் வடகொரியா மறுபடியும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இது தோல்வியில் முடிந்தபோதும், சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில் வடகொரிய வெளியுறவுத்துறை துணை மந்திரி ஹான் சாங் ரையோல் பி.பி.சி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘‘நாங்கள் இனி வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர அடிப்படையில் ஏவுகணை சோதனைகளை நடத்துவோம். அமெரிக்கா எங்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால், அது முழு அளவிலான போராக மாறும்’’ என எச்சரித்தார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘அமெரிக்கா எங்கள் மீது ராணுவ நடவடிக்கைக்கு திட்டம் போட்டால், நாங்கள் எங்களுக்கே உரித்தான விதத்தில் அணு ஆயுத தாக்குதல் நடத்தி பதிலடி கொடுப்போம்’’ என்று கொக்கரித்தார். வடகொரியா எங்களை சோதிக்க வேண்டாம் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறிய நிலையில், வடகொரியா இப்படி கொக்கரித்திருப்பது பதற்றத்தை மேலும் தொடரச்செய்துள்ளது.


மக்கள் கருத்து

சாமிApr 19, 2017 - 03:20:01 PM | Posted IP 117.2*****

விரைவில் ஓயப்போகிறாய் தம்பி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




crescentopticals


New Shape Tailors



Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing



Thoothukudi Business Directory