» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒரு மணிநேரத்தில் 22½ கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த 105 வயது முதியவர்!!

வியாழன் 5, ஜனவரி 2017 11:58:01 AM (IST)



பிரான்சில் ஒரு மணிநேரத்தில் 22½ கி.மீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்து 105 வயது முதியவர் சாதனை படைத்துள்ளார். 

சாதனைக்கு வயது தடை இல்லை’ என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் 105 வயது முதியவர் ஒருவர் 1 மணி நேரத்தில் 22.5 கி.மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். அவரது பெயர் ராபர்ட் மார்சண்ட். இவர் பிரான்சை சேர்ந்தவர். இவர் பாரீஸ் அருகே ஒரு விளையாட்டு மைதான ஓடு தளத்தில் சைக்கிள் ஓட்டினார். ஒரு மணி நேரத்தில் இவர் 22.5 கி.மீட்டர் தூரம் ஓட்டி சாதனை படைத்தார். 

அவரது சாதனையை பாராட்டி, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இவர் தனது 102 வயது வயதில் 26.9. கி.மீட்டர் தூரம் வரை சைக்கிள் ஓட்டியுள்ளார். 1911-ம் ஆண்டில் பிறந்த இவர் தனது 14 வயதில் மோட்டார் சைக்கிள் ஓட்ட பழகினார். தனது 67 வது வயதில் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டினார். 2012-ம் ஆண்டில் அதாவது தனது 100-வது வயதில் 4 மணி 17 நிமிடம் 27 வினாடிகளில் 100 கி.மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்தார். அதற்காக 6 மாதம் பயிற்சி மேற்கொண்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


CSC Computer Education





selvam aqua


Black Forest Cakes



Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory