» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வியாழன் 3, ஏப்ரல் 2025 8:22:22 AM (IST)



சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர ஒவ்வொரு மாதமும் (தமிழ் மற்றும் மலையாளம்) முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும். அதே போல் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவும் 10 நாட்கள் கொண்டாடப்படும். அதன்படி பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி முன்னிலையில் தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்ம தத்தன் ஆகியோர் காலை 9.30 மணிக்கு கொடியை ஏற்றி வைத்தனர். விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜைகளுடன், உத்சவ பலி சிறப்பு வழிபாடு நடைபெறும். வருகிற 10-ந் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டையும், 11-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டும் நடைபெறும்.

இதனை தொடர்ந்து அன்றைய தினம் மாலை 6 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. அதை தொடர்ந்து சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகை வருகிறது. இதனால் சபரிமலை கோவில் தொடர்ந்து 18-ந் தேதி வரை திறந்திருக்கும். விஷு பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுவதால் அன்று அதிகாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு பூஜை மற்றும் கனி காணும் சடங்கு நடைபெறும்.

பக்தர்களுக்கு கை நீட்டமாக நாணயங்களை தந்திரி மற்றும் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஆகியோர் வழங்குகிறார்கள். பங்குனி உத்திர ஆராட்டு விழா தொடங்கியதால் சபரிமலை, பம்பை மற்றும் நிலக்கல்லில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் நலன் கருதி திருவனந்தபுரம், செங்கன்னூர், பத்தனம்திட்டா, கோட்டயம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education


New Shape Tailors



Thoothukudi Business Directory