» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஓடும் ரயிலில் இருந்து குதித்து மாணவி தற்கொலை: டாக்டர் கனவு நிறைவேறாததால் விபரீத முடிவு

சனி 7, டிசம்பர் 2024 12:51:09 PM (IST)

டாக்டர் ஆகும் கனவு நிறைவேறாததால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் கலபுரகி டவுனை சேர்ந்தவர் தனுஜா. இவர் பெங்களூருவில் ஒரு விடுதியில் தங்கியிருந்து வந்ததாக தெரிகிறது. டாக்டர் படிக்க ஆசைப்பட்ட அவர் கர்நாடக அரசின் பொது நுழைவுத்தேர்வு (சி.இ.டி.) எழுதினார். 2 முறை தேர்வி எழுதியும் குறைந்த மதிப்பெண்களையே எடுத்திருந்தார். இதனால் இருமுறையும் எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்காமல் அவரது டாக்டர் ஆகும் கனவு நிறைவேறாமல் போனது. இதன் காரணமாக மனம் உடைந்து காணப்பட்ட அவரை பெற்றோர் சமாதானப்படுத்தி வந்தனர்.

இதற்கிடையே தனுஜா நேற்று பெங்களூருவில் இருந்து தனது சொந்த ஊரான கலபுரகிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். இந்த ரயில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் சென்று தான் மீண்டும் கர்நாடக எல்லைக்குள் வரும். அதுபோல் அந்த ரயில் அனந்தபூர் மாவட்டம் ராயதுர்கா அருகில் சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தனுஜா, தனது பெற்றோரிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது, டாக்டர் ஆகும் கனவு நிறைவேறாததால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். பின்னர் அவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் தனுஜா பிணமாக கிடந்ததை பார்த்த அனந்தபூர் ரயில்வே போலீசார், ரயிலில் இருந்து இளம்பெண் தவறி விழுந்து இறந்ததாக கருதி விசாரணை நடத்தினர். ஆனால் இது குறித்து தனுஜாவின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், டாக்டராகும் கனவு நிறைவேறாத அவர் மனம் உடைந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. டாக்டர் கனவு நிறைவேறாத விரக்தியில் மாணவி ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory