» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை : இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
வெள்ளி 6, டிசம்பர் 2024 11:14:49 AM (IST)
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) மாற்றமில்லை என இந்திய ரிசர்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி 6.5 சதவிகிதமாகத் தொடரும் என ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி விகிதத்திலும் மாற்றம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு வளர்ச்சி(ஜிடிபி) 6.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஜிடிபி முந்தைய கணிப்பு 7.2 சதவீதமாக இருந்தது. 2020 பிப்ரவரி மாதம் முதல் 11-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.