» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜம்மு காஷ்மீர் சட்டசபை இறுதி கட்ட தேர்தல் : விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

செவ்வாய் 1, அக்டோபர் 2024 12:30:27 PM (IST)



ஜம்மு காஷ்மீர் சட்டசபை இறுதி கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 40 தொகுதிகளில் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. 90 தொகுதிகள் கொண்ட காஷ்மீரில் 3 கட்டமாக தேர்தல் நடக்கிறது. கடந்த 18-ந் தேதி 24 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடந்தது. 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 25-ந் தேதி 26 தொகுதிகளில் 2-வதுகட்ட தேர்தல் நடந்தது. 57.31 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், 40 சட்டசபை தொகுதிகளில் இன்று 3-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். வாக்குப்பதிவை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணி நிலவரப்படி 28.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital







Thoothukudi Business Directory