» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: மக்களவையில் எதிர்க் கட்சியினர் அமளி!

புதன் 24, ஜூலை 2024 11:44:26 AM (IST)

மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இதில், ஆந்திரம், பிகார் ஆகிய இரு மாநிலங்களுக்கு மட்டும் திட்டங்களை அறிவித்து, மற்ற மாநிலங்கள் மீது பாரபட்சம் காட்டியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர்கள் விமர்சித்தனர்.

இந்த நிலையில், மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை பட்ஜெட்டை விவாதத்துக்கு முன்வைத்தபோது, சில மாநிலங்களுக்கு அதிக நிதியும், பல மாநிலங்களுக்கு நிதியே ஒதுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலக்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளதாக கார்கே பேசியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

கார்கேவின் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்த நிர்மலா சீதாராமன், எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை என்றும் அனைத்து மாநில பெயர்களையும் குறிப்பிட முடியாது என்றும் தெரிவித்தார். இதற்கிடையே மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

அதேபோல், மக்களவை கேள்வி நேரத்தின் போது பட்ஜெட்டுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பட்ஜெட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.


மக்கள் கருத்து

பட்ஜெட்Jul 27, 2024 - 03:35:52 PM | Posted IP 172.7*****

நிதிஷ் குமார் , சந்திரபாபு நாயுடும் அவர்கள் மாநில மக்களுக்ககான திட்டங்களை மத்தியில் ஆளும் பிஜேபி யிடம் வாங்கி உள்ளார்கள் . இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் / விடியல் கட்சிகள் மந்திரி பதவிக்கு சண்டை போட்டு வாங்கி கொள்வார்கள்......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory