» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய பட்ஜெட் எதிரொலி: தங்கம், செல்போன், விலை குறையும் பொருட்கள் பட்டியல்!

புதன் 24, ஜூலை 2024 10:17:33 AM (IST)

2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட் எதிரொலியாக செல்போன்கள், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைகிறது. 

# புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படும் ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் மற்றும் ட்ராஸ்டுஜுமாப் டெரக்ஸ் டெகன் என்ற 3 முக்கிய மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை குறையும்.

# மேலும் செல்போன்கள், சார்ஜர்கள் மற்றும் செல்போனின் பிரிட்டட் சர்க்யூட் போர்டு அசெம்ளி ஆகியவற்றுக்கான சுங்க வரியை 20 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதனால் அவற்றின் விலை குறையும்.

# இந்தியாவில் தங்கத்துக்கு அதிக தேவை உள்ளது. இவற்றின் இறக்குமதிக்கான வரி அதிகம் இருந்ததால், தங்கம் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படுவதும் அதிகரித்தது. அதனால் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைப்பதாக பட்ஜெட்டில் றிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கம், வெள்ளி நகைகளின் விலை குறையும். இதேபோல் பிளாட்டினத்துக்கான வரியும் 6.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

# தோல் பொருட்கள், கடல் உணவுகளுக்கான சுங்கவரியும் குறைக்கப்படுவதால் அவற்றின் விலை குறையும்.

# அணு சக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி, பாதுகாப்பு, தொலை தொடர்பு மற்றும் ஹைடெக் எலக்ட்ரானிக்ஸ் தொழில்களுக்கு தேவைப்படும் லித்தியம், தாமிரம், கோபால்ட் உட்பட 25 முக்கிய அரிய வகை தாது பொருட்களுக்கான சுங்க வரிகளுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டுக்கு மட்டும் சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இது இத்தொழில் தொடர்பான பொருட்களின் விலை குறைப்புக்கு வழிவகுக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory