» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கூட்டணிக் கட்சிகளை திருப்திப்படுத்தும் பட்ஜெட்: ராகுல் காந்தி விமர்சனம்!

செவ்வாய் 23, ஜூலை 2024 3:37:10 PM (IST)

கூட்டணிக் கட்சிகளை திருப்திப்படுத்தும் விதமாக, நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

2024-25 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் இன்று காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய முக்கிய கட்சிகளாக விளங்கும் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆளும் ஆந்திர பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் விதமாகவே பட்ஜெட் உள்ளது.சாமானிய இந்தியர்கள் எவ்வித பலனும் இல்லாத வகையில், ஏஏ-வுக்கு (AA - அம்பானி, அதானி) பலன் தரும் விதமாக உள்ளது. 

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டுகளை நகலெடுத்து ஒட்டியுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார். ஆந்திர பிரதேசத்துக்கு ரூ. 15,000 கோடியும், பிகாருக்கு ரூ. 26,000 கோடியும் சிறப்பு நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பேரிடர் நிவாரண நிதி, பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களும் இரு மாநிலங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory