» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அறிவிப்பு

செவ்வாய் 23, ஜூலை 2024 12:01:53 PM (IST)

ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார்.  ஆந்திரம் மற்றும் பிகார் மாநிலங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

பிகாரில் சாலைகள், மேம்பாலம் அமைக்க 26 ஆயிரம் கோடி வழங்கப்படும்.

பிகார் மாநிலத்தில், நீர் பாசனம் மற்றும் வெள்ளத்தடுப்பு திட்டங்களுக்கும் புதிய அறிவிப்புகள் வெளியீடு

பிகார் மாநிலத்தில் வெள்ள பாதிப்பைத் தடுக்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

பிகாரில் உள்ள புராதனமான கோயில்களை மேம்படுத்த திட்டம்.

நளந்தா பல்கலையின் மேம்பாட்டுக்கும் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்கும் கூடுதல் நிதி.

ஆந்திர வளர்ச்சிக்காக ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு

ஆந்திரப்பிரதேசத்தில் மின்சாரம், சாலை, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும்.

ஆந்திரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

ஆந்திரத்தில் சாலை மேம்பாடு, நீர் திட்டங்களுக்கு கூடுதல் நிதி அளிக்கப்படும்.

ஆந்திர தலைநகர் அமராவதியை உருவாக்க ரூ.15,000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory