» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது ஏன்? - நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல்
சனி 30, செப்டம்பர் 2023 5:28:55 PM (IST)
அதிமுக - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மேலிடத்திற்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக - பாஜக இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. இனி பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்றே அதிமுகவினர் கூறி வருகின்றனர். ஆனால், அதிமுகவுடன் இன்னும் பேச்சுவார்த்தையில் இருப்பதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது குறித்து பாஜக தலைமை கூறியதற்கு இணங்க, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதிமுக கூட்டணி முறிவு குறித்து தமிழக பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு அறிக்கை தயார் செய்துள்ளார்.
கூட்டணி முறிவு ஏன் ஏற்பட்டது? அதிமுக பிரிந்து செல்வதினால் பாஜகவுக்கு இழப்பு ஏற்படுமா? அதிமுக இன்றி வலுவான கூட்டணி அமையுமா? உள்ளிட்டவை குறித்து அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அறிக்கையை பாஜக தலைமையிடம் நிர்மலா சீதாராமன் இன்று சமர்ப்பித்துள்ளார்.
ஏற்கெனவே அதிமுக கூட்டணி முறிவு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசுவதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நாளை (அக்.1) தில்லி செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










