» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தேசிய நெடுஞ்சாலை பள்ளங்களுக்கு இனி பொறியாளர்களே பொறுப்பு:மத்திய அரசு முடிவு!
சனி 30, செப்டம்பர் 2023 4:17:06 PM (IST)
தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அரசு நெடுஞ்சாலை பொறியாளர்களே இனி பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்களை சரி செய்யுமாறும் மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு திட்ட இயக்குநர்களும், அனைத்து சாலைகளையும் 15 நாள்களுக்கு ஒரு முறை நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளங்கள் இல்லாத சாலைகளாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள 1.46 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு கொண்ட தேசிய நெடுஞ்சாலையானது குறிப்பிட்ட பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்படும். அந்த வகையில், புதிதாக ஒப்பந்தங்களை விடுக்கும்போது, அதில், சாலை பராமரிப்புக்கான குறிப்பிட்ட விதிமுறைகளும் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் 3,625 சாலை விபத்துகளில் 1,481 பேர் பலியாகியுள்ளனர். 3,064 பேர் காயமடைந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், நெடுங்சாலைகளில் இருக்கும் பள்ளங்கள், வாகனங்களின் வேகத்தையும் கட்டுப்படுத்திவிடுகின்றன.
தேசிய நெடுஞ்சாலைகளில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய புதிய விதிமுறை வகுக்கப்படும். பொறியியல் மாணவர்களைக் கொண்டு சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை கண்டறியவும் அதனை உடனுக்குடன் சரி செய்யவும் தேவையான தொழில்நுட்பங்களைக் கொண்டு வர ஊக்குவிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










