» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மத்திய பாஜக அரசு ரயில்வே முழுவதையும் சீரழித்துவிட்டது: லாலு பிரசாத் யாதவ்
சனி 3, ஜூன் 2023 5:47:25 PM (IST)
மத்திய பாஜக அரசு ரயில்வே முழுவதையும் சீரழித்துவிட்டது. அலட்சியமே உயிரிழப்புகளுக்கு காரணம் என முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உயர்மட்ட விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; இந்த அரசு ரயில்வே முழுவதையும் சீரழித்துவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை தற்போது 261ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்து நாடு முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
TamilanJun 4, 2023 - 07:08:17 PM | Posted IP 162.1*****
ithai solla oolal kutravaliku thaguthi illai....
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)











திருடன் திருடன்தான்Jun 5, 2023 - 06:18:23 AM | Posted IP 162.1*****