» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமில்லை: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
வெள்ளி 2, ஜூன் 2023 10:59:15 AM (IST)
சடலத்துடன் உடலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமில்லை என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் துமகூருவை சேர்ந்த ரங்கராஜ் என்பவர், கடந்த 2015-ம் ஆண்டு இளம்பெண் ஒருவரை கொலை செய்து, அந்த சடலத்துடன் உடலுறவு கொண்டார். இந்த வழக்கை விசாரித்த துமகூரு கோர்ட்டு, ரங்கராஜுக்கு ஆயுள் தண்டனையும், சடலத்துடன் உடலுறவு கொண்டதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்திருந்தது.
இதை எதிர்த்து ரங்கராஜ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கர்நாடக ஐகோர்ட்டு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. கொலை குற்றத்திற்கான ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம் சடலத்துடன் உடலுறவு கொண்டதற்கான தண்டனையை ரத்து செய்தது. சட்டப்படி இறந்த உடலை மனிதராக கருத முடியாது என்றும், இயற்கைக்கு மாறான உடலுறவு, கற்பழிப்பு போன்ற சட்டப்பிரிவுகள் இந்த குற்றத்திற்கு பொருந்தாது என்றும் தெரிவித்தது. இறந்த உடலுடன் உடலுறவு கொள்வதை குற்றம் என்பதை உறுதி செய்ய சட்டத்தில் திருத்தம் செய்யவோ அல்லது புதிய சட்டத்தையோ மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்துக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:18:04 PM (IST)

தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க எதிர்ப்பு : கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்
வெள்ளி 29, செப்டம்பர் 2023 3:55:37 PM (IST)

நட்சத்திரங்கள் ஆய்வுக்கான செயற்கைகோளை டிசம்பரில் செலுத்த திட்டம்: இஸ்ரோ தகவல்
வெள்ளி 29, செப்டம்பர் 2023 1:38:54 PM (IST)

கர்நாடகாவில் நாளை பந்த்: பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை!
வியாழன் 28, செப்டம்பர் 2023 4:34:10 PM (IST)

9 மாதங்களில் 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்க தூதரகம்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 4:21:34 PM (IST)

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
வியாழன் 28, செப்டம்பர் 2023 3:14:08 PM (IST)
