» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்குவேன்: பிரஜ் பூஷண்
புதன் 31, மே 2023 3:56:37 PM (IST)
"என் மீதான பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்குவேன்" என்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் தெரிவித்துள்ளார்.
பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகாா் கூறி, கடந்த ஒரு மாதமாக டெல்லி ஜந்தா் மந்தரில் நட்சத்திர மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், வீரா் பஜ்ரங் புனியா உள்ளிட்டோா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். கடந்த 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டவுடன், டெல்லி ஜந்தா் மந்தரில் இருந்து இவா்கள் தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனா். அவா்களைத் தடுத்து நிறுத்தி தடுப்புக் காவலில் கொண்டு சென்ற டெல்லி போலீஸாா், சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்ததுடன் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ளனர்.இந்நிலையில், குற்றச்சாட்டு குறித்து பிரிஜ் பூஷண் பேசுகையில், என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்குவேன். உங்களிடம்(வீராங்கனைகள்) ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்பியுங்கள். நான் தண்டனை பெறத் தயாராக இருக்கிறேன்" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்: நிதீஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:53:19 AM (IST)

ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே ரிசர்வேஷன் சார்ட்: பயணிகள் மகிழ்ச்சி
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:29:04 AM (IST)

வா வாத்தியார் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:57:34 PM (IST)










