» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்தின் இயக்குநர் பிரதமருடன் சந்திப்பு!

வியாழன் 30, மார்ச் 2023 4:08:37 PM (IST)



யானைகள் பற்றிய குறும்படத்திற்காக ஆஸ்கர் வென்ற இயக்குநர், தயாரிப்பாளர் பிரதமர் மோடியை சந்தித்தனர். இயக்குநர் கார்த்திகி, தயாரிப்பாளர் குனீத் மோங்கா டெல்லியில் பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ஹாலிவுட் திரைப்படங்களுக்கான 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் கடந்த மார்ச் 13ம் தேதி நகரில் நடைபெற்றுது. இதில் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறுப்படம் ஆஸ்கர் விருதை வென்றது.

முதுமலை தெப்பகாடு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் குட்டி யானைகள் பராமரித்த பாகன் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெல்லி ஆகியோரை மையமாக கொண்டு 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' எனப்படும் ஆவண குறும்படத்தை இயக்குநர் கார்த்திகி இயக்கியிருந்தார்.

இந்த ஆவணப்படம் நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் தாயை பிரிந்த இரண்டு யானை குட்டிகளும், அவற்றின் பராமரிப்பாளர்களுக்கும் இடையிலான பிரிக்க முடியாத பிணைப்பை சித்தரித்து எடுக்கப்படுள்ளது. இந்நிலையில் 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண குறும்படத்தை இயக்கிய கார்த்திகி மற்றும் தயாரிப்பாளரான குனீத் மோங்கா ஆகியோர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory