» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவில் 110 யூடியூப் சேனல்களுக்கு தடை: மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை நடவடிக்கை!
புதன் 22, மார்ச் 2023 11:55:23 AM (IST)
நாட்டின் இறையான்மைக்கு எதிராக தகவல் வெளியிட்ட 110 யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்துள்ளதாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.
நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தகவல்களை வெளியிட்ட 110 யூடியூப் செய்தி சேனல்கள், 248 இணையதள முகவரிகளுக்கு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் முதல் மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது என மக்களவையில் ஒரு எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அனுராக் தாகூர், பத்திரிகை தகவல் அலுவலகத்தின், உண்மையை சரிபார்க்கும் பிரிவு, ஆயிரத்து 160 செய்திகள் பொய்யானவை என்று கண்டுபிடித்துள்ளது. மக்கள் அனுப்பும் கேள்விகள் அடிப்படையிலும், தாமாக முன்வந்தும் செய்திகளின் உண்மைத்தன்மையை இந்தப் பிரிவு பரிசோதிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி.. டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்..!
புதன் 31, மே 2023 10:48:39 AM (IST)

மல்யுத்த வீராங்கனைகளின் பதக்கங்களை கங்கையில் வீசும் திட்டம் நிறுத்திவைப்பு
புதன் 31, மே 2023 10:24:44 AM (IST)

இந்திய பணத்தின் நேர்மையில் சந்தேகம் : ப.சிதம்பரம் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
செவ்வாய் 30, மே 2023 5:15:03 PM (IST)

மணிஷ் சிசோடியா ஜாமின் மனு தள்ளுபடி : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 30, மே 2023 12:48:55 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி; 30 பேர் காயம்!
செவ்வாய் 30, மே 2023 11:23:36 AM (IST)

ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 8 தொழிலாளர்கள் பலி!
திங்கள் 29, மே 2023 9:01:30 PM (IST)
