» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது: அனுராஜ் சிங் தாக்கூர் விளக்கம்

செவ்வாய் 21, மார்ச் 2023 5:09:40 PM (IST)

ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மக்களவையில் திமுக எம்.பி. பார்த்திபன் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் அனுராஜ் சிங் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டம் மூலம் இந்தியா முழுவதும் ஒவ்வொரு நாளும் கோடிக் கணக்கான பணம் புழங்குகிறது. சாமானியவர்கள் முதல் படித்தவர்கள் வரை இந்த விளையாட்டுக்கு ஏராளமானோர் அடிமையாகியுள்ளனர். ரம்மி விளையாட்டு பொழுது போக்கிற்காக இருந்தவரை பிரச்னையில்லை. 

ஆனால் அது எப்போது பணம் வைத்தும் விளையாடும் சூதாட்டமானதோ, அப்போதிலிருந்து தான் பிரச்னை தொடங்குகிறது. பந்தயம், சூதாட்டம், அரசியலமைப்பு சட்டத்தின் 7-வது அட்டவணையில் 34-வது பிரிவில் இடம்பெற்றுள்ளது. 7-வது அட்டவணை, 34-வது பிரிவில் உள்ள அம்சங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்டங்களை மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது எனத் தெரிவித்தார்.. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory