» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஊழல் புகார்: அமலாக்கத்துறை விசாரணைக்கு தெலங்கானா முதல்வா் மகள் கவிதா ஆஜர்!

சனி 11, மார்ச் 2023 11:58:20 AM (IST)

கலால் கொள்கை வழக்கு தொடர்பாக தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவின் மகள் கவிதா இன்று(சனிக்கிழமை) அமலாக்கத்துறை முன்பாக விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். 

தில்லி கலால் கொள்கையில் ஊழல் நடைபெற்றதாகக் கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. கலால் கொள்கையில், மது விற்பனையுடன் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட குழுவிடம் இருந்து ஆம் ஆத்மி தலைவா்கள் சாா்பில், அக்கட்சியைச் சோ்ந்த விஜய் நாயா் என்பவா் சுமாா் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகவும், அந்தக் குழுவில் சரத் ரெட்டி, கவிதா, மகுன்ட ஸ்ரீநிவாசுலு ரெட்டி உள்ளிட்டோா் இடம்பெற்றதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. 

அமலாக்கத் துறை குறிப்பிட்ட நபா்களில் ஒருவரான கவிதா, தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவின் மகள் ஆவாா். அவா் தெலங்கானா சட்டமேலவை உறுப்பினராக உள்ளார். இந்த வழக்குத் தொடா்பாக கடந்த டிசம்பரில் கவிதாவிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த வழக்குத் தொடா்பாக மார்ச் 9 ஆம் தேதி விசாரணைக்கு கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கவிதா தரப்பில் இரு நாள்கள் அவகாசம் கேட்கவே, மார்ச் 11 ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை கூறியது. அதன்படி, தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தெலங்கானா எம்எல்சி கவிதா இன்று ஆஜராகியுள்ளார்.  பெண்களுக்கு இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி கவிதா நேற்று தில்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory