» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வன்முறையை தூண்டும் சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” பிரசாந்த் கிஷோர் கேள்வி

வெள்ளி 10, மார்ச் 2023 4:39:30 PM (IST)

‘தமிழகத்தில் இந்தி பேசுபவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் சீமான் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்று பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ‘நாம் தமிழர்’ பொதுக்கூட்டம் ஒன்றில் சீமான் பேசிய வீடியோ ஒன்றை பகிந்துள்ளார். அதில், "வட இந்தியர்களைப் பிடித்து அடித்து அவர்களின் மீது வழக்கு தொடருவேன். ஒரு வாரத்திற்குள் அவர்களாகவே மூட்டையக் கட்டவைத்து விடுவேன்” என சீமான் பேசியுள்ளார்.

அந்த வீடியோவுடனான பதிவில் பிரசாந்த் கிஷோர், "போலியான வீடியோக்கள் மூலம் வெறுப்பையும் வன்முறையையும் தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வெளிப்படையாகவே வன்முறையைத் தூண்டுவர்களையும் விட்டுவிடக் கூடாது. ஏன், சீமான் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, வட இந்தியர்களுக்கு எதிரான வீடியோவை பரப்பியதற்காக உத்தரப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் பிரஷாந்த் உம்ராவ் உள்ளிட்ட மூன்று பேர் மீது தமிழக காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக வதந்திகளைப் பரப்புபவர்கள் தேச துரோகிகள் என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க/ஸ்டாலின் கூறியிருந்தார். தமிழகம் வந்து நேரில் ஆய்வு செய்த பிஹார் அரசுக் குழுவும் "தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளனர்” என்று உறுதி செய்தது. இந்தப் பின்னணியில் சீமான் குறித்த பிரசாந்த் கிஷோரின் இந்தக் குற்றச்சாட்டு கவனத்தை ஈர்த்துள்ளது.


மக்கள் கருத்து

பரதேசி அவர்களேMar 12, 2023 - 05:48:47 PM | Posted IP 162.1*****

ஓ வயிற்று பிழைப்புக்காக கோடி சொத்து உள்ள அரசியல்வாதி கல் உடைக்க வருகிறாரோ? என்னடா சொல்றேங்க? படிக்கிறவர்கள், உழைக்கிறவர்கள் நம் தமிழ்நாட்டுக்கு வரலாம் ஆனால் திருடர்கள் அரசியல்வாதிகள் வந்தால் எல்லாம் சந்தேகமா இருக்கும். டுபாய் ல கக்கூஸ் கழுவ, கொத்தடிமை வேலைபார்க்க, ஆசன வாயில் தங்கம் கடத்த சில திருட்டு பயலுக தான் போவாங்க. ஆனால் அரசியல்வாதிகள், தேவை இல்லாமல் போகமாட்டான். அதுல ஒரிஜினல் பரதேசி யாரு என்று கடவுளுக்கு தெரியும் .

பல கொத்தடிமைகள்Mar 12, 2023 - 08:51:14 AM | Posted IP 162.1*****

அரபுநாட்டுக்கு நிறைய கொத்தடிமை இருக்கான், திருடினால் கையை எடுத்து விடுவார்கள் என்ற சட்டம் இருக்கு. இங்கு திருடினால் பணம் வாங்கி விடுவார்கள் அதான் கேவலம்

பரதேசிMar 11, 2023 - 11:41:30 AM | Posted IP 162.1*****

அவன் வயிற்றுப்பிழைப்புக்கு வருகிறான் நீ அரபு நாட்டிற்கு செல்லவில்லையா பரதேசி

திமுக கைக்கூலிMar 10, 2023 - 10:49:37 PM | Posted IP 162.1*****

பேச்சை பாரு , பீகாரிக்கு இங்கே என்ன வேலை?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory