» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அதானி தொடா்பான செய்திகளை வெளியிட தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

புதன் 8, பிப்ரவரி 2023 11:29:44 AM (IST)

செபியின் அனுமதியில்லாமல் அதானி குழுமத்தின் செய்திகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊடகங்கள் மிகைப்படுத்தி வெளியிடும் செய்திகளால் இந்திய பங்குச் சந்தை மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. அச்சத்தின் காரணமாக முதலீட்டாளா்கள் பங்குகளை விற்பனை செய்து வருவதால் நிதி இழப்பீடு ஏற்படுகிறது. நீதித் துறை இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் அனுமதியில்லாமல் அதானி குழுமத்தின் செய்திகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். இந்திய பங்குச் சந்தைகள் செயற்கையாக சரியும் வகையில் அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பா்க் நிறுவனம் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞா் எம்.எல்.சா்மா தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளாா். இந்த மனு இன்னும் விசாரணைக்கு பட்டியலிடப்பட வில்லை.


மக்கள் கருத்து

indianFeb 8, 2023 - 03:28:38 PM | Posted IP 162.1*****

ivanum arasiyal vaathiyum onnu thaanya ellarum makkaloda varipanathai thaan kollai adiukuraanga.. namma makkaluku innum ithu puriyama iruku.

பாலா அவர்களேFeb 8, 2023 - 12:02:12 PM | Posted IP 162.1*****

அவன் குஜராத்தி , நம்ம ஊரு அரசியல்வாதிகள் எல்லாம் மக்கள் பணத்தை ஏப்பம் விட்டார்கள்.

BalaFeb 8, 2023 - 11:52:39 AM | Posted IP 162.1*****

ஏன்டா நொண்ண இவன் மக்கள் பணத்தை ஏப்பம் விடுவான் இவனை பத்தி ஏதும் பேசக்கூடாது..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory