» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆந்திராவின் தலைநகர் விசாகப்பட்டினம் : முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 31, ஜனவரி 2023 3:44:25 PM (IST)
ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதிக்கு பதில் விசாகப்பட்டினம் என மாற்றப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு வெளியிட்டார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற சர்வதேச தூதரக கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி: எங்கள் தலைநகராக இருக்கும் விசாகப்பட்டினத்திற்கு உங்களை அழைக்க நான் வந்துள்ளேன். நானும் விசாகப்பட்டினம் நகருக்கு மாறுகிறேன். ஆந்திராவில் வணிகம் செய்வது எவ்வளவு எளிது என்பதை நீங்களே பார்க்க உங்களையும் உங்கள் சக ஊழியர்களையும் அழைக்கிறேன்' என்று கூறினார்.
ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம், தனியாக பிரிந்த பின்னர், ஹைதராபாத் தெலங்கானாவின் நிரந்தர தலைநகரமானது. இதனால், விஜயவாடா தற்காலிக தலைநகரமாக செயல்பட்டது. அதன்பின்னர் ஆந்திராவுக்கு அமராவதி எனும் புதிய தலைநகரை சந்திரபாபு நாயுடு அறிவித்தார். ஆனால் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்த பின்னர், அமராவதியை தலைநகராக்கும் முடிவை கடுமையாக எதிர்த்து வந்தார்.
பின்னர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு அமைந்த பிறகு விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும், அமராவதியை சட்டமன்றத் தலைநகரமாகவும், கர்நூலை நீதித்துறையின் தலைநகராகவும் மாற்ற ஆந்திர அரசு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் மூன்று தலைநகர் திட்டத்தை கைவிட்டு, ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினத்தை அறிவித்து அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.92 குறைப்பு: இன்று முதல் அமல்
சனி 1, ஏப்ரல் 2023 11:45:45 AM (IST)

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை வெளியிடக் கோரிய கெஜ்ரிவாலுக்கு அபராதம்!
வெள்ளி 31, மார்ச் 2023 5:16:13 PM (IST)

நான் தப்பி ஓடவில்லை, விரைவில் உலகின் முன் தோன்றுவேன் - அம்ரித்பால் சிங்
வெள்ளி 31, மார்ச் 2023 4:54:18 PM (IST)

கோவிலில் கிணறு படிக்கட்டு இடிந்து 12பேர் பலி - ராமநவமி கொண்டாட்டத்தில் சோகம்!
வியாழன் 30, மார்ச் 2023 4:45:26 PM (IST)

ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்தின் இயக்குநர் பிரதமருடன் சந்திப்பு!
வியாழன் 30, மார்ச் 2023 4:08:37 PM (IST)

ஏப்ரல் மாதத்தில் 15 விடுமுறை நாட்கள் : ஆர்பிஐ அறிவிப்பு - முழு பட்டியல்
வியாழன் 30, மார்ச் 2023 3:53:24 PM (IST)
