» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒடிசாவில் 253 ஏக்கர் பரப்பளவில் வேதாந்தா அலுமினிய பூங்கா: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

வியாழன் 1, டிசம்பர் 2022 3:28:52 PM (IST)ஒடிசாவில் 253 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள வேதாந்தா லிமிடெட் அலுமினிய பூங்காவிற்கு ஒடிசா முதல்வர் நவீன பட்நாயக் அடிக்கல் நாட்டினார்.

ஒடிசா மாநிலம், ஜார்சுகுடாவில் 253 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அனுமினிய பூங்காவிற்கு மேக் இன் ஒடிசா 2022 மாநாட்டில் வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் முன்னிலையில் முதல்வர் நவீன பட்நாயக் அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய அகர்வால், வேதாந்தா அலுமினிய பூங்கா, இந்தியாவின் மிகப்பெரிய உலோக பூங்காக்களில் ஒன்றாக இருக்கும். இந்த திட்டம் வேதாந்தா அலுமினியம் மற்றும் ஒடிசா தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் கூட்டு முயற்சியாகும். 

ஜார்சுகுடாவில் உள்ள வேதாந்தாவின் அலுமினியம் உருக்காலை, ஆண்டுக்கு 1.75 மில்லியன் டன்கள் கொள்ளளவு கொண்ட உலகின் மிகப்பெரிய அலுமினிய உருக்காலைகளில் ஒன்றாகும். பல ஆண்டுகளாக, வேதாந்தா 1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்து 5 லட்சத்திற்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வாழ்வாதார வாய்ப்புகளை மாநிலத்தில் உருவாக்கியுள்ளது. இப்போது வேதாந்தா அலுமினியப் பூங்கா, ஒடிசாவுக்கு அதிக மதிப்பைக் கூட்டி, மாநிலத்தில் தொழில் மயமாக்கலை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory