» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கருணாநிதி நினைவுச் சின்னம் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு: தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

புதன் 5, அக்டோபர் 2022 5:29:03 PM (IST)தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடலில் நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் கடந்த ஆண்டு ஆக. 24 அறிவித்தார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை, சிந்தனைகளைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும். அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே நினைவிடம் அமைக்கப்படும். அந்த நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும்" என்றார்.

இதனைத் தொடர்ந்து கருணாநிதிக்கு அமைக்கப்படவுள்ள நினைவிடத்தின் மாதிரி வரைபடத்தை முதல்வர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், உதயசூரியன் வடிவில் கருணாநிதி நினைவிடமும், பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் இடம்பெற்று இருந்து.

இதனைத் தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் கடலுக்குள் 42 மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்தது.

இந்த நினைவுச் சின்னம் கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு சென்றடையும் வகையில் நினைவிடத்தில் இருந்து 290 மீ தூரத்திற்கு கடற்கரை, 360 மீ தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைக்கப்படவுள்ளது. தற்போது மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் கால நிலை மாற்றத்துறை தமிழக பொதுப்பணி துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இதில் மத்திய நிபுணர் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சுட்டிக் காட்டி இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதில் இந்த திட்டத்திற்கு சுற்றச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம், இடர்பாடுகள் மதிப்பீட்டு அறிக்கை, பேரிடர் மேலாண்மை திட்டம் ஆகியவற்றை தயார் செய்து அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

வேண்டாத வேலைApr 6, 1665 - 08:30:00 AM | Posted IP 162.1*****

பிற்காலத்தில் மெரினா பீச் எல்லாம் திராவிட கல்லறைகளாக மாறி நாறி விடும்..

ஆனந்தன்Oct 5, 2022 - 10:15:17 PM | Posted IP 162.1*****

பேனா என்ற பெயரில் கடல் அளவு ஊழல் செய்தார் என்று பொருள் கொள்ளலாம்

மக்கள்Oct 5, 2022 - 07:04:17 PM | Posted IP 162.1*****

உங்க அப்பன் காசு கொண்டு வந்து இடம் வாங்கி கட்டுங்க , மக்கள் பணத்தை ஆட்டைய போட வேண்டாம் .

gbdkgjbOct 5, 2022 - 06:40:43 PM | Posted IP 162.1*****

kandippa vaikkanum.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory