» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜம்மு-காஷ்மீர் டிஜிபி கொலையில் பயங்கரவாத சதிச் செயல் எதுவும் இல்லை: காவல்துறை
புதன் 5, அக்டோபர் 2022 4:51:14 PM (IST)
ஜம்மு - காஷ்மீரில் சிறைத் துறை டிஜிபி ஹேமந்த் லோஹியா படுகொலை வழக்கில் பயங்கரவாத சதிச் செயல் எதுவும் இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருக்கும் நிலையில், சிறைத் துறை டிஜிபி லோஹியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவரிடம் நேற்று முதல் விசாரணை தொடங்கி நடைபெற்று வருவதாக ஏடிஜிபி முகேஷ் சிங் கூறியுள்ளார். முதற்கட்ட விசாரணையில், லோஹியா, கடந்த சில நாள்களாக அவரது நண்பர் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று இரவுதான் அவரது அறைக்குத் திரும்பியிருக்கிறார். அப்போது வீட்டுப் பணியாளர் அவருக்கு சில உதவிகளை செய்துள்ளார். பிறகு, அந்த அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிய பணியாளர், டிஜிபியை பயங்கரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார்..
டிஜிபி லோஹியாவைக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை நடந்த விசாரணையில் பயங்கரவாத சதிச் செயல் எதுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. குற்றவாளியிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையை, கள நிலவரங்கள் மூலம் உறுதி செய்து வருகிறோம் என்றார். மேலும், கொலைக் குற்றவாளியின் டைரி கண்டெடுக்கப்பட்டது. அதில், அவர் பல்வேறு மனநிலை பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மறுசுழற்சி பெட் பாட்டிலில் இருந்து தயாரிக்கப்பட்ட உடையில் பிரதமர் மோடி!
புதன் 8, பிப்ரவரி 2023 5:01:41 PM (IST)

ரெப்போ கடன் வட்டி விகிதம் 6.5% ஆக உயர்வு: வீடு, வாகன கடனுக்கான வட்டி உயருகிறது!
புதன் 8, பிப்ரவரி 2023 12:16:07 PM (IST)

அதானி தொடா்பான செய்திகளை வெளியிட தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
புதன் 8, பிப்ரவரி 2023 11:29:44 AM (IST)

ஆளுநரின் செயல்பாடுகள் தமிழக அரசுக்கு எதிராக உள்ளது: கனிமொழி புகார்!
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 5:18:32 PM (IST)

கடந்த 3 ஆண்டுகளில் அதானியின் சொத்து உயர்ந்தது எப்படி? ராகுல் காந்தி கேள்வி!
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 3:42:28 PM (IST)

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத ஓராண்டு விலக்கு : உச்சநீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 11:46:29 AM (IST)
