» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு குறித்து அமித் ஷாவிடம் எடுத்துக் கூறினேன் : இபிஎஸ் பேட்டி!

செவ்வாய் 20, செப்டம்பர் 2022 5:05:50 PM (IST)


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எடுத்துக்கூறியதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

புது தில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. மத்திய உள்துறை அமைச்சர் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. அரசியல் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் பேசவில்லை. கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவது, நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை நிறைவேற்றுவது பற்றியும் அமித் ஷாவிடம் வலியுறுத்தியுள்ளேன்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு பற்றி எடுத்துக் கூறினேன். தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது பற்றி அமித் ஷாவிடம் கூறினேன் என்று தெரிவித்தார். செய்தியாளர்கள் ஓ. பன்னீர்செல்வம் குறித்து கேள்விகள் எழுப்பியதற்கு, நேரடியாக எந்த பதிலும் அளிக்காமல், மன்னிக்கவும், சாரி என்றே பதிலளித்தார் எடப்பாடி பழனிசாமி.


மக்கள் கருத்து

TWO LEAFSep 21, 2022 - 03:35:44 PM | Posted IP 162.1*****

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory