» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லியில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
புதன் 17, ஆகஸ்ட் 2022 12:20:05 PM (IST)

டெல்லியில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் மாளிகையில் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, திமுக மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். தொடர்ந்து, இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தமிழகம் சாா்பிலான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கவுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராஜஸ்தானை காங்கிரஸ் அரசு அழிவுக்குள் தள்ளிவிட்டது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
திங்கள் 2, அக்டோபர் 2023 5:38:47 PM (IST)

காந்தி ஜெயந்தி: நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்!
திங்கள் 2, அக்டோபர் 2023 12:07:20 PM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்.29ஆம் தேதி 8 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து!
திங்கள் 2, அக்டோபர் 2023 11:53:48 AM (IST)

ஆந்திராவில் திருப்பதி, கடப்பா உள்ளிட்ட 60 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
திங்கள் 2, அக்டோபர் 2023 11:49:12 AM (IST)

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது ஏன்? - நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல்
சனி 30, செப்டம்பர் 2023 5:28:55 PM (IST)

இந்திய தூதருக்கு குருத்வாராவில் அனுமதி மறுப்பு: பிரிட்டனிடம் இந்தியா விளக்கம் கேட்பு
சனி 30, செப்டம்பர் 2023 5:15:27 PM (IST)
