» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 7பேர் உயிரிழப்பு!

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 4:50:42 PM (IST)ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த் நாக் பகுதியில் இந்தோ திபெத்தியன் எல்லை காவல் படை வீரர்கள் பயணம் செய்த பேருந்து, பஹல்காம் என்ற இடத்தில் சாலையில் இருந்து விலகி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் இந்தோ- தீபெத் எல்லை காவல் படை வீரர்கள் 37 பேர், ஜம்மு காஷ்மீர் போலீசார் 2 பேர் என மொத்தம் 39 வீரர்கள் பயணித்தனர். இந்த விபத்தில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். 

காயம் அடைந்த வீரர்கள் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனிடம் வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory