» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சுதந்திர தின விழா : அதிகமான மக்கள் கூடுவதை தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்

வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 12:47:22 PM (IST)

சுதந்திர தின விழாவில்  அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது..

நாட்டில் கரோனா தொற்று பரவலானது நாள்தோறும் புதிதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், சுதந்திர தினத்தன்று அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்போர் அனைவரும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், "அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும், இந்த நாளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக, சுதந்திர தினத்தன்று, மிகப்பெரிய அளவில் மக்கள் ஒரே இடத்தில் கூடும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads











Thoothukudi Business Directory