» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் இருந்து ஜபல்பூர் புறப்பட்ட விமானத்தில் நடுவானில் புகை: பயணிகள் பீதி!!

சனி 2, ஜூலை 2022 4:48:33 PM (IST)டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீரென புகை வந்தது. இதனால், அந்த விமானம் மீண்டும் டெல்லிக்கு திரும்பியது.

தலைநகர் டெல்லியில் இருந்து இன்று (ஜூலை2) காலை 6:15 மணிக்கு ஜபல்பூருக்கு பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கிளம்பியது. சிறிது நேரத்தில் 5,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது, விமானத்தின் கேபினில் இருந்து திடீரென புகை காரணமாக பயணிகள் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் காலை 7:00 மணிக்கு பாதுகாப்பாக டெல்லி திரும்பியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக அந்த விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory