» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடியை 3வது முறையாக புறக்கணித்த சந்திரசேகர் ராவ்: சின்ஹவுக்கு வரவேற்பு!

சனி 2, ஜூலை 2022 11:56:08 AM (IST)

தெலங்கானா வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதை அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் கடந்த 6 மாதங்களில் 3 ஆவது முறையாக புறக்கணித்துள்ளார். 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்றும் நாளையும்(ஜூலை 2-3) இரு நாள்கள் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பேகம்பேட்டை(Begumpet) விமான நிலையம் வரவுள்ளார். அவரை வரவேற்க அதிகாரிகளுடன் ஒரு அமைச்சர் மட்டுமே செல்லவிருப்பதாக மாநில அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், பிரதமர் மோடி வரும் அதே விமான நிலையத்திற்கு எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ இன்று வரவுள்ளார். சின்ஹவை, சந்திரசேகர் ராவ் நேரில் சென்று வரவேற்க உள்ளார். இதன் மூலமாக கடந்த 6 மாதங்களில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை வரவேற்பதை முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்துள்ளார். 

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணியை உருவாக்கும் முனைப்பில் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  அதுபோல நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹவுக்கு ஆதரவளிப்பதாகவும்  சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory