» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வயநாட்டில் அடித்து நொறுக்கப்பட்ட எம்பி அலுவலகம் : ராகுல் காந்தி பார்வையிட்டார்

வெள்ளி 1, ஜூலை 2022 5:28:24 PM (IST)வயநாட்டில் தாக்குதலுக்குள்ளான தன் அலுவலகத்தை ராகுல் காந்தி  பார்வையிட்டார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளம் மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற உறுப்பினரானார். இந்நிலையில், கடந்த ஜூன் 24 ஆம் தேதி வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்திற்குள்  நுழைந்த சிலர் திடீரென தாக்குதல் நடத்தினர்.தாக்குதலில் அலுவலகம் அடித்து நொறுக்கப்படும் காட்சிகள் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. 

பின்,  இந்திய மாணவர் சங்கத்தினரே இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்பதும் உறுதிசெய்யப்பட்டது. மேலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் அமைப்பு (எஸ்எஃப்ஐ) தாக்குதல் நடத்தியதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் தாக்குதலுக்குள்ளான தன் அலுவலகத்தைப் பார்வையிட்டு கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital
Thoothukudi Business Directory