» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல்: முர்மு, சின்ஹ வேட்பு மனுக்கள் ஏற்பு

வியாழன் 30, ஜூன் 2022 5:13:24 PM (IST)

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய  ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

ஜூலை 18-ல் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட 115 மனுக்களில் தாக்கலின்போதே 28 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதியிருந்த 72 வேட்பாளர்களின் 87 மனுக்களில் 79 மனுக்கள் தேவையான நிபந்தனைகளை நிறைவு செய்யாததால் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெறக் கடைசி நாளான ஜூலை 2-க்குப் பிறகு அரசிதழில் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

நாட்டின் அதி உயர் பதவிக்காகப் போட்டியிட, முர்மு, சின்ஹ தவிர,  மும்பையைச் சேர்ந்த குடிசைவாசி, தமிழகத்தைச் சேர்ந்த சமூக  செயற்பாட்டாளர், தில்லியைச் சேர்ந்த பேராசிரியர் ஆகியோரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மனுச் செய்வோரைத் தேர்வாளர்கள் குழுவிலிருந்து (மக்களவை, மாநிலங்களவை, மாநிலங்களின் பேரவை உறுப்பினர்கள்) 50 பேர் முன்மொழியவும் 50 பேர் வழிமொழியவும் வேண்டும்  என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory