» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே ராஜிநாமா ஏற்பு: ஆளுநர் அறிவிப்பு

வியாழன் 30, ஜூன் 2022 11:34:58 AM (IST)

மகாராஷ்டிர மாநில முதல்வா் உத்தரவ் தாக்கரேவின் ராஜிநாமாவை ஆளுநர் பகத்சிங் கோஷியாரி ஏற்றுக்கொண்டுள்ளார்.  

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த சில மணி நேரத்தில், முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்தாா். முன்னதாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், "சட்டப்பேரைவயில் நடைபெறும் எண்ணிக்கை விளையாட்டில் எனக்கு விருப்பமில்லை. எனவே, முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வதோடு, எனது சட்ட மேலவை உறுப்பினா் பதவியையும் ராஜிநாமா செய்கிறேன். பதவியை ராஜிநாமா செய்வதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் எந்தவித பிரச்னையுமின்றி மாநிலம் திரும்புவதற்கு சிவசேனை தொண்டா்கள் அனுமதிக்கவேண்டும். அவா்களுக்கு எதிராக சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். சிவசேனை மற்றும் பால் தாக்கரே மூலமாக அரசியல் ரீதியில் வளா்ச்சி பெற்ற இந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், பால் தாக்கரேவின் மகனை முதல்வா் பதவியிலிருந்து நீக்குவதில் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்து கொள்ளட்டும். எனக்கு எதிராக கட்சியின் ஒரு உறுப்பினா் மாறினாலும், அதை நான் வெட்க்கக்கேடாக நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மகா விகாஸ் அகாடி அரசுக்கு இதுவரை ஆதரவு அளித்து வந்ததற்காக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் ஆகியோருக்கு உத்தவ் தாக்கரே நன்றியும் தெரிவித்திருந்தார்.  ராஜிநாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார் தாக்கரே. 

இந்நிலையில், உத்தவ் தாக்கரேவின் ராஜிநாமாவை ஆளுநர் பகத்சிங் கோஷியாரி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், மேலும், மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை உத்தவ் தாக்கரே முதல்வராக தொடருமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவசேனையில் உள்ள 55 எம்எல்ஏக்களில் 39 பேர் முதல்வர் தாக்கரேவுக்கு எதிராக அணி திரண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory