» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மும்பையில் 4 அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி; 12 பேர் மீட்பு

செவ்வாய் 28, ஜூன் 2022 11:05:28 AM (IST)



மும்பையில் நான்கு அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கிய 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மும்பை குர்லா பகுதியில் நாயக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருந்தது. 4 தளங்கள் கொண்ட இந்த கட்டிடம் சிதிலமடையும் நிலையில் இருந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதலே இந்த கட்டிடத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, குடியிருப்புவாசிகள் காலி செய்யுமாறு மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி வந்துள்ளது. இந்நிலையில், நாயக்நகர் சொசைட்டியின் D பிரிவு குடியிருப்பு நேற்று பின்னிரவு இடிந்து விழுந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இதுவரை 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இன்னும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கின்றனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடுதல் ஆணையர் அஸ்வினி பிடே தலைமையில் மீட்புப் பணிகள் நடைபெறுகின்றன. மீட்புப் பணியில் ஐந்து ஜேசிபிக்கள், மாநில பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவ பகுதிக்கு மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்ய தாக்கரே சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் மும்பை மாநகராட்சி அவ்வப்போது பழைய கட்டிடங்களைக் கண்டறிந்து நோட்டீஸ் அளிக்கிறது. ஆனால் மக்கள் நோட்டீஸ் வழங்கப்பட்டாலும் காலி செய்வதில்லை. அதனால்தான் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இப்போதைய முக்கிய பணி மீட்புப் பணிகள் மட்டுமே என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory